நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின் போது பல முக்கிய விடயங்கள் மற்றும் புதிய செயற்றிட்டங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வெற்றி இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் என்றும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளதை முன்னிட்டு இலங்கை மக்களுக்கும் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியாக பொதுமக்கள் அளித்த ஆணைக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணி வலுவான தலைமைத்துவத்தை வழங்கும் என இந்திய பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.