தேசிய அரசாங்கத்திற்கு ஆறுமுகன், டக்ளஸ் ஆதரவு
National government gets new members - தேசிய அரசாங்கத்திற்கு ஆறுமுகன், டக்ளஸ் ஆதரவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்னாள் அமைச்சர்களான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் தற்சமயம் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அமையவுள்ள புதிய தேசிய அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு, ஆறுமுகன் தொண்டமானும், டக்ளஸ் தேவானந்தாவும் பூரண ஒத்துழைப்பை வழங்கவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து நாட்டின் எதிர்காலத்தின் பொருட்டு விசேட வேலைத்திட்டத்தை தற்போதே ஆரம்பித்துள்ளதாகவும் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.