5,291 Views
தம்மை விடுக்க க்கோரி விடுத்த கோரிக்கைக்கு பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை யை அடுத்தே சிலர் இத்தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் மற்றும் வேறு பல குற்றங்களில் குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் இணங்காணப்பட்ட பலருக்கு குறித்த முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றது. இங்கு சுமார் 500 பேர் வரை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரட்நாயக்க நேற்று அங்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது விடுதலை செய்வது தொடர்பில் இடம்பெற்ற விவாதமே மோதலுக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.