6,318 Views
வாரியபொல பிரதேசத்தில் யுவதியொருவர் இளைஞன் ஒருவரின் கன்னத்தில் அறையும் காணொளியொன்று கடந்த வருடம் இணையத்தில் வெளியாகியிருந்தது.
மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை யாரும் அவ்வளவு இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள்.
இச்சம்பவம் நீதிமன்றம் வரை சென்றது. இந்நிலையில் குறித்த சம்பவ த்தில் பெண்ணிடம் அறைவாங்கிய நபர் குற்றம் செய்தது தானே என ஒப்புக்கொண்டுள்ளார்.
அப்பெண்ணிடம் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டமையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.