அமைச்சரவை அமைச்சர்கள் மூவர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
நீர்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ துறை அமைச்சராக விஜித் விஜயமுனி சொய்சா பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான அமைச்சராக மலிக் சமரவிக்கிரமவும், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சராக பைசர் முஸ்தபாவும் நியமனம் பெற்றுள்ளனர்.