தீபாவளி ரேஸில் மிரட்டும் 'தல' - "வேதாளம்" தீபாவளி ரேஸில் வரிசை கட்ட ஆரம்பித்திருக்கும் படங்களில், தமிழ் சினிமாவை அதிர வைக்கும் அளவுக்கு "தல 56" ல் பொறி பறக்கும் பஞ்ச் வசனங்கள் இடம்பெறுவது பற்றிய செய்திகள் நேற்றுவரை வெளிவந்துகொண்டிருந்த நிலையில், "தல 56" படத்தின் முதல் பார்வை (First Look) மற்றும் தலைப்பு என்பன வெளியாகி கோடம்பாக்கத்தையே மிரண்டுபோகச் செய்திருக்கின்றது.
தீபாவளி ரேஸில் வரிசை கட்ட ஆரம்பித்திருக்கும் படங்களில், தமிழ் சினிமாவை அதிர வைக்கும் அளவுக்கு "தல 56" ல் பொறி பறக்கும் பஞ்ச் வசனங்கள் இடம்பெறுவது பற்றிய செய்திகள் நேற்றுவரை வெளிவந்துகொண்டிருந்த நிலையில், "தல 56" படத்தின் முதல் பார்வை (First Look) மற்றும் தலைப்பு என்பன வெளியாகி கோடம்பாக்கத்தையே மிரண்டுபோகச் செய்திருக்கின்றது.
'தல' அஜித் படம் என்றாலே அளவு கடந்த எதிர்பார்ப்பிற்கு பஞ்சம் இருப்பதில்லை. அஜித்தின் அதிவிசிறிகளிலிருந்து அடுத்த 'சூப்பர்ஸ்டார்' போட்டியில் மல்லுக்கட்டும் சக போட்டி நடிகர் வரை ஆர்வத்தோடு அவதானிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கும். இந்தநிலையில் தான் படத்தின் முதல்பார்வை மற்றும் பெயர் ஆகியன இன்று வெளியாகி இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கின்றன.
நேற்றுவரை ரசிகர்களால் பல தலைப்புக்கள் ஊகிக்கப்பட்டாலும், யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் வித்தியாசமான தலைப்பாக வெளியாகியுள்ளது "வேதாளம்" என்ற பெயர். நள்ளிரவுக்குப்பின் வெளியான இந்த படத்தின் முதல்பார்வை மற்றும் பெயர் ஆகியவற்றை தங்கள் தூக்கம் தொலைத்து 'ட்ரெண்ட்' பண்ணிக்கொண்டே இருக்கின்றார்கள் தல ரசிகர்கள்.
இது இப்படியிருக்க, இந்த "வேதாளம்" என்ற தலைப்பு கிடைப்பதற்கு காரணமானவர் இயக்குனரும், நடனக்கலைஞரும், பிரபல நடிகருமான ராகவா லோரன்ஸ் என்ற முக்கியமான விஷயம் தற்போது வெளியே கசிந்திருக்கின்றது. "தல 56" படத்திற்கான தலைப்பை படக்குழுவினர் முடிவு செய்துவிட்டு அதைப்பதிவு செய்யச் சென்றபோது அந்தப்பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்படிருந்தது. இந்தத் தலைப்பை ஏற்கனவே பதிவு செய்து வைத்தவர் லோரன்ஸ். இந்தநிலையில், 'தல' அஜித் நடிக்கும் படத்திற்கு இந்தப்பெயர் பொருத்தம் என்றும், "வேதாளம்" என்ற பெயரை படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள் என்று தெரிந்ததும் அதை சந்தோசமாக விட்டுக்கொடுத்திருக்கிறார் ராகவா லோரன்ஸ். இதன்காரணமாக அஜித் ரசிகர்கள் அவருக்கு தமது வரவேற்பைத் தெரிவித்திருக்கின்றார்கள்.
இதேவேளை, படத்தில் அஜித் இருவேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஃப்ளாஷ் பேக்கில் வரும் அஜித் 'வேதாளம்' என்ற பெயரில் தாதா வேடத்தில் வருவதாகவும், அவருக்கான தோற்றமே வெளியாகியுள்ள ஃபெஸ்ட் லுக் எனவும் விஷயமறிந்த வட்டாரங்கள் காதோரம் கிசுகிசுக்கின்றன.
*S. G. R