தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் உலக தமிழர்களை கவர்ந்திருக்கும் விஜய் நடித்து வெளியாகியுள்ள புலிக்கு பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த வாரம் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. நிலை இவ்வாறு செல்ல தமிழின் சூப்பர் ஸ்டார் ரஜினி புலியையும் விஜயையும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
குறிப்பாக சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் ரசித்து பார்க்கும்படி இருப்பதாக திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ‘புலி’ படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்ட செட்டுகள் என்னை ரசிக்க வைத்தது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தன. எனவும் சூப்பர் ஸ்டார் சொல்லியுள்ளார்.
விஜயின் நடிப்பு என்னை கவர்ந்துள்ளது. அவருடைய முயற்சியை நான் பாராட்டுகின்றேன். ஆங்கில திரைப்படங்களை ஒத்ததாகவே இப்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் இதன் போது தெரிவித்திருந்தார். அத்துடன் ஸ்ரீதேவியின் நடிப்பும் தன்னை வெகுவாக கவர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
-ரிஷிவ்-