Maxwell Paranagama report - யுத்தத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்: கூறுகின்றார் மெக்ஸ்வெல் பரணகம(காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,495 Views
இறுதியுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனிதவுரிமை மீறல் தொடர்பில் ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பேன் கீ மூனினால் நியமிக்கப்பட்ட தருஸ்மன் அறிக்கையில் உள்ளடங்கியுள்ள சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் தலைவரான முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம இதனை தெரிவித்துள்ளார்.
தருஸ்மன் அறிக்கையில் சில விடயங்கள் விசாரணை மேற்கொள்ளப்படாமல் உள்வாங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியுத்தத்தின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தருஸ்மன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், அதற்கான சாட்சிகளோ, அடிப்படை ஆதாரங்களோ முன்வைக்கப்படவில்லை என மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 7000 பேர் வரையிலேயே கொல்லப்பட்டுள்ளதார அவர் தெரிவிக்கின்றார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக எமது செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை , இறுதியுத்த காலப்பகுதியில் காணாமல்போனவர்கள் தொடர்பில் டெஸ்மன் சில்வா என்ற பெயரில் அறிக்கையொன்று இல்லை என பிரதமர் இன்று உறுதிப்படுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் ஜெனீவா மனிதவுரிமைகள் யோசனை தொடர்பான விவாதத்தின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது உரையில், ஸ்ரீமத் டெஸ்மன் டி சில்வா, மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பை மாத்திரமே வழங்கியதாக குறிப்பிட்டார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான ‘மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவுக்காக ஸ்ரீமத் டெஸ்மன் சில்வா மற்றும் ஸ்ரீமத் ஜேப்ரி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் கிரேன் ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இன்று காலை தாம் டெஸ்மன் டி சில்வாவுடன் உரையாடியதாக தெரிவித்த பிரதமர், அவரின் பெயரில் அறிக்கையொன்று இல்லை என தாம் உறுதிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.