Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
31
ரஸ்ய விமானத்தை வீழ்த்தியது நாமே ஐ.எஸ்.ஐ.எஸ் உரிமை கோரியுள்ளது!: உயிரிழந்தோரில் 17 சிறுவர்கள் (படங்கள்)

ISIS clamis responsibility for Russian crash - ரஸ்ய விமானத்தை வீழ்த்தியது நாமே ஐ.எஸ்.ஐ.எஸ் உரிமை கோரியுள்ளது!: உயிரிழந்தோரில் 17 சிறுவர்கள் (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,558 Views
ரஸ்ய விமானத்தை தாங்களே வீழ்த்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புட்டின் மற்றும் ரஸ்யா தம்மை இலக்குவைத்து சிரியாவில் நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடியே மேற்படி தாக்குதல் என அவ்வியக்கம் தெரிவித்துள்ளது.

எனினும் மேற்படி தகவலை மொஸ்கோ மற்றும் எகிப்து ஆகியன மறுத்துள்ளன.

மேற்படி சம்பவத்தின் போது 200 வளர்ந்த பயணிகள் , 17 சிறுவர்கள் மற்றும் 7 பணியாளர்கள் உட்பட 224 பேர் விமானத்தில் இருந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தோரில் அதிகமானோர் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

எகிப்தின் ஷார்ம் எல்-சேய்கிலிருந்து புறப்பட்டு 25 நிமிடத்தில் விமானம் விபத்துக்குள்ளானது. சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானம் நிமிடத்துக்கு 6000 அடி என கீழிறங்கி தரையில் மோதியுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானி கட்டுப்பாட்டறைக்கு அறிவித்ததாகவும் , விமான நிலையமொன்றில் தரையிறக்க அனுமதி கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ள ஹசானா பகுதி ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் துணை இயக்கங்களின் ஆதிக்கத்திற்குட்பட்டதென தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் , சடலங்களும் மீட்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகமான சடலங்கள் எரிந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இராணுவ நிபுணர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கமானது தோலில் தாங்கும் தரையிலிருந்து பறக்கும் இலக்கினை குறிவைக்கும் ஏவுகனை மூலமாக, சம்பவத்தின் போது விமானம் பறந்து கொண்டிருந்தாக கூறப்படும் 30,000 அடி உயரத்தில் உள்ள இலக்கினை அழித்திருக்க முடியாதென வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும் விமானத்தினுள் குண்டை வெடிக்க வைத்திருக்கக்கூடிய சாத்தியத்தித்தினை மறுக்க முடியாதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் இருந்ததாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தின் பணியாளர்கள் எஞ்சின் ஒழுங்காக இயங்காமை குறித்து பல தடவைகள் தொழில்நுட்ப சேவைகள் பிரிவிடம் உதவிகள் கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த நபரொருவர் தான் விமானத்தை கண்டதாகவும் , விமானம் எரிந்துகொண்டே கீழே விழுந்து நொறுங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் முழுவிசாரணைக்கு ரஸ்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கு துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top