5,632 Views
பிலியந்தலை- தம்பே வீதியில் - சுவாரபொல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.
சவிந்து அயோமால் என்ற என்ற 5 வயதான சிறுவனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் தாயும் , தந்தையும் அவரை பாட்டனாரிடம் ஒப்படைத்து விட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். பின்னர் பாட்டனாரும் தனது தேவையொன்றின் பொருட்டு வெளியே செல்வதற்காக சிறுவனை உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
