மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நேபாளம் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் சார்ஜாவில் இடம்பெற்றுவருகிறது.
இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக ரோகித் 38 ஓட்டங்களை குவித்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 149 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர்.
ஆனால், நேபாளம் சிறப்பாக பந்துவீசி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
இதனால், 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நேபாளம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் நேபாளம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.