அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA, மீண்டும் சந்திரனை நோக்கி மனிதர்களுடன் பயணிக்க திட்டமிட்டுள்ளது.
Artemis 2 எனப்படும் இந்தத் திட்டம், 2026 பெப்ரவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் சந்திரனை நோக்கி மனிதர்களுடன் பயணிக்கவுள்ளது.
Artemis விண்கலத்தில் 10 நாட்கள் சந்திரனை சுற்றி விண்வெளி வீரர்கள் பயணிக்க உள்ளனர். அவர்கள் சந்திரனின் சுற்றுப்பாதையில் 9,260Km தூரம் சென்று சந்திரனில் இறங்காமல் பூமிக்கு திரும்புவார்கள்.
2022-இல் நடந்த Artemis 1 திட்டம் வெற்றிகரமாக சந்திர சுற்றுப்பயணத்தை முடித்தது. ஆனால், அது பூமிக்கு திரும்பும்போது வெப்பக்கவசம் எதிர்பார்த்ததை விட அதிகமாக எரிந்ததால், Artemis 2 திட்டம் 2024-இல் இருந்து 2026-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்கான விண்கலம் தயாராகி வருகிறது. குறித்த விண்கலம் தற்போது நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ளது. இந்தத் திட்டம், எதிர்கால சந்திர தரையிறக்கத்திற்கும் ஆழமான விண்வெளி ஆராய்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.