தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார்.
இவர் 2013ஆம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை காதலித்துக் கரம்பிடித்தார்.
இவர்களுக்கு ஆன்வி என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இதனையடுத்து, ஜி.வி.பிரகாஷ் குமார் - சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி, கடந்த வருடம் சென்னை 1ஆவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று ஜி.வி.பிரகாஷ் குமார் - சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் இவ்வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்திருந்தார்.