71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த August மாதம் 1ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் சிறந்த திரைப்பட இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
நேற்றையதினம் 2023ஆம் ஆண்டுக்கான 71ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா Delhiயில் நடைபெற்றது.
இதில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் ஷாருக்கானிற்கும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது ராணிமுகர்ஜி அவர்களும் பெற்றிருந்தனர்.
அத்துடன், பிரபல மலையாள நடிகர் மோகன்லால் அவர்களுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருதும் வழங்கப்பட்டது.
'வாத்தி' திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது G.V பிரகாஷ்குமார் பெற்றுள்ளார்.
‘Parking’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது MS.பாஸ்கரிற்கும், இத்திரப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் சினிஷ் ஆகியோருக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
‘உள்ளொழுக்கு’ என்ற மலையாள திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினை நடிகை ஊர்வசி பெற்றுள்ளார்.