நடிகர் விஷால் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 21 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனவே இது குறித்து நடிகர் விஷால் தந்து சமூக வலைதள பக்கங்களில் நெகிழ்ச்சியான காணொளி ஒன்றையும் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
இதில் தனது இரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது முதலாவது திரைப்படம் முதல் இப்போது வரை தனக்கு கிடைத்துள்ள வெற்றிகள் எல்லாவற்றுக்கு இரசிகர்கள் மட்டும்தான் மிகப்பெரிய காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நடிகர் விஷால் தற்போது மகுடம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது அவரின் 35ஆவது திரைப்படம் ஆகும்.