விமான விபத்திலிருந்து உயிர் பிழைக்க உதவும் செயற்கை நுண்ணறிவு
AIR BAG வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் விமானத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையிறக்கும் வகையில் இந்த AIR BAG வடிவமைக்கப்பட்டுள்ளது.
விமானம் கீழே வீழ்ந்தாலும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் Project rebirth என்ற பெயரில் துபாய் பிட்ஸ் (BITS) பல்கலைக்கழக மாணவர்கள் இந்த புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
விமானம் பறக்கும் உயரம், வேகம், இயந்திர நிலை உள்ளிட்டவற்றை AI சென்சார் கண்காணித்து விமானத்தில் செயலிழப்பு ஏதேனும் ஏற்பட்டால் 2 நொடிகளில் Smart AIR BAG விரிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த கண்டுபிடிப்பு, உலகளவில் புதிய கண்டுபிடிப்புக்களை கெளரவிக்கும் மதிப்புமிக்க ஜேம்ஸ் டைசன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.