நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி, தனது அரசியல் கட்சியில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அதாவது ஜனவரி 9 ஆம் திகதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இதேவேளை சமீபத்தில் நடைபெற்ற கரூர் பிரச்சனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சில தரப்பினர் விஜய்க்கு எதிராகவும் பலர் தங்களது ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் இச்சம்பவம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு எதிரான சதி என்றும் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் விஜய் அரசியலிலும் வெல்ல வேண்டும் என்று அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நாள் தோறும் அன்னதானம் செய்து வருகிறார். இந்த அன்னதானம் நடிகர் விஜய்க்கு சொந்தமான சாலிகிராமம் வீட்டில் நாள் தோறும் நடைபெற்று வருகிறது.