Facebook மற்றும் Instagram ஆகிய இரண்டிலும் விளம்பரங்களை தவிர்க்க சந்தா முறையை Meta நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
முதலில் இங்கிலாந்தில் அடுத்த சில வாரங்களில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், சமீபத்திய இங்கிலாந்து ஒழுங்குமுறை வழிகாட்டுதலுக்கிணங்க இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக Meta தெரிவித்துள்ளது.
விளம்பரங்கள் இல்லாத சந்தாவின் விலை இணையத்தில் மாதம் £2.99 மற்றும் iOS மற்றும் Android செயலிகளில் பயன்படுத்துவோருக்கு மாதம் £3.99 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் Account Center இல் சேர்க்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கணக்கிற்கும் இணையத்தில் £2 , iOS/Android-இல் £3 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் Account Center இல் இணைக்கப்பட்ட அனைத்து Facebook மற்றும் Instagram கணக்குகளிலும் விளம்பரங்கள் தோன்றாது. இந்த நடைமுறை வருங்காலங்களில் ஏனைய நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.