சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14 ஆம் திகதி வெளிவந்த 'கூலி' திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற போதிலும் வசூல் ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 500 கோடி ரூபாவைக் கடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் அடுத்ததாக 'ஜெயிலர் 2 ' திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்,படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய போது பத்திரிகையாளர்களிடம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி 'ஜெயிலர் 2' திரைப்படம் ரிலீஸ் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.