தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்.
இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் 'மதராஸி'.
இத்திரைப்படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.
இத்திரைப்படம் ஒரு Time Travel கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் November மாதம் ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், இவர்களின் கூட்டணியில் உருவாகவுள்ள இத்திரைப்படம் தொடர்பான Update வெளியாகியுள்ளது.
அதாவது, சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு இணையும் இப்புதிய திரைப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.