இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ்.
பிரபாஸ் கடைசியாக நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இத்திரைப்படம் இந்திய மதிப்பில் 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, மாருதி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ‘The Rajasaab’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் 1st Glimpse மற்றும் Teaser வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படம் 2026ஆம் ஆண்டு ஒரு பான் இந்தியா திரைப்படமாக ஹிந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் Trailer இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாகத் திரைப்படக்குழு அறிவித்துள்ளது.