நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவ் விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், "வடசென்னை 2 திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விரைவில் தொடங்கவுள்ளோம்" என்று தெரிவித்தார்.
இத் தகவலானது தனுஷ் இரசிகர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா இரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.