Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழக அரசு

SooriyanFM Gossip - கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழக அரசுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

243 Views
2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.
மிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படும்.


தற்போது, 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படவுள்ளது. கலைமாமணி விருது வழங்கக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என கலைப் பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு, கலைமாமணி விருது பெறத் தகுதியுள்ள கலைஞர்களைத் தேர்வு செய்திட கலைப் பிரிவு வாரியாக வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

மேற்படி வல்லுநர் குழுக்களால் அளிக்கப்பட்ட தகுதியுள்ள கலைஞர்களின் பெயர்ப் பட்டியல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரையை ஏற்று 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் அறிவித்துள்ளது. இந்தக் கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 பவுன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.

அதற்கமைய, 2021ஆம் ஆண்டுக்கான விருதுகள் திரைத்துறை பிரிவில் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் திரைத் துறையில் நடிகர் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா, டைமண்ட் பாபு, டி.லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டுக்கான விருதுகளில் திரைத் துறையில் நடிகர்கள் மணிகண்டன், ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஸ்வேதா மோகன், சாண்டி மாஸ்டர், நிகில் முருகன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் இசைப்பிரிவில் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிறந்த கலை மன்றமாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றமும், சிறந்த நாடக குழுவமாக மதுரை எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றமும் விருதுக்கு தேர்வாகியுள்ளன.

சின்னத்திரை நடிகர் பி.கே.கமலேஷ், நடிகை ஜெயா வி.சி. குகநாதன், மெட்டி ஒலி காயத்ரி ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top