குமாரசம்பவம் திரைப்படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார்.
சின்னத்திரை நாடகம் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் குமரன் தங்கராஜன். இவர் தற்பொழுது வெள்ளி திரையில் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.
இப்படம் ஒரு ஃபீல் குட் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 12-ம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.