ஆசியக்கிண்ண தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் துபாயில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழட்சியில் வென்ற பாக்கிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்ததாட தீர்மானித்தது.
ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இந்த இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 16 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 131 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் போட்டி முடிவடைந்த பின்னர் இரு அணியின் வீரர்களும் கைக்குலுக்காமல் சென்றமை தற்போது No Handshake என ட்ரெண்டாகி வருகிறது.