Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
27
கலாச்சாரத்தை அழிக்கும் நிகழ்வுகளுக்கு இனி இடமில்லை- ஜனாதிபதி கொந்தளிப்பு (காணொளி)

Enrique show - கலாச்சாரத்தை அழிக்கும் நிகழ்வுகளுக்கு இனி இடமில்லை- ஜனாதிபதி கொந்தளிப்பு (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,864 Views
 ஒழுக்கக்கேடான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு அரசாங்கம் இனிமேல் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி , கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வெளிநாட்டு கலைஞரொருவரின் பங்குபற்றலில் அண்மையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி குறித்த நிகழ்ச்சியின் போது பெண்கள் மார்புக் கச்சையை கழற்றி மேடையை நோக்கி வீசியதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒழுக்கக்கேடான நிகழ்ச்சிகள் இதன்பின்னர் நடத்தப்படுவதற்கு அனுமதியளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  இந்நிகழ்ச்சி தொடர்பில் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்திருந்தார்.

உலகப் பிரசித்தி பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) பங்குபற்றிய ‘ENRIQUE IGLESIAS LIVE IN COLOMBO’ என்ற குறித்த நிகழ்ச்சியை ‘Live Events’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

Live Events நிறுவனத்தின் உரிமையாளர்கள் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் ஆவர்.

இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதம் தொடர்பில் நாடு முழுவதும் மற்றும் சமூகவலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான காரணம் இந்நிகழ்சியின் போது அரங்கேறிய இலங்கையின் கலச்சாரத்திற்கு பொருந்தாத அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமையாகும்.

இந்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு நிகழ்வுக்கும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளது இந்நிகழ்ச்சியை மையப்படுத்தியே ஆகும்.




அந்நிகழ்வில் பெண்ணொருவர் மேடையில் ஏறி பாடகரை கட்டி அணைத்த காட்சி





Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top