பொங்கல் வெளியீடாக திரை கண்டிருக்கிறது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான "ரஜினிமுருகன்" திரைப்படம். நீண்ட பல இழுபறிகளுக்கு பின்னர் ஒருவாறு வெள்ளித்திரை கண்டிருக்கும் இந்தப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கின்றது.
பொங்கல் ரேசில் ரஜினிமுருகன், கெத்து, மிருதன், கதகளி, தாரை தப்பட்டை ஆகிய படங்கள் போட்டி போட்டிருந்த நிலையில், ரசிகர்களின் வரவேற்பிலும் சரி, படம் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையிலும் சரி முன்னிலை வகிப்பது இந்த "ரஜினிமுருகன்" தான் என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.
இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள இந்த "ரஜினிமுருகன்" திரைப்பட முதல் காட்சியை கண்டு ரசித்த ரசிகர்களிடமிருந்து படத்தின் வெற்றிக்கு சார்பான கருத்துக்களே விமர்சனங்களாக வெளியாகிக்கொண்டிருக்கின்றனவாம்.
இது இப்படியிருக்க, எப்போதும் 'மாஸ்' 'மாஸ்' என சொல்லிக்கொண்டிருக்கும் "இளைய தளபதி" ரசிகர்களை இந்தப்படத்தின் மூலம் வம்புக்கிழுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சிவகர்த்திகேயன் ரசிகர்கள். "மாஸ்" என்றால் என்னவென்று இங்கே வந்து "ரஜினிமுருகன்" பார்த்து தெரிஞ்சுக்கோங்க என்று சீண்டல் ஆரம்பித்திருக்கின்றது.
அது மட்டுமல்லாமல், விஜய்யின் "கத்தி" திரைப்படத்தில், சிறைச்சாலை கட்டட அமைப்பு பற்றிய ப்ளூ பிரிண்ட்(Blue print)ஐ விஜய் கேட்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதுபோல ப்ளூ பிரிண்ட் சம்பந்தமான ஒரு காட்சி "ரஜினிமுருகன்" படத்திலும் உள்ளதாகவும், இந்தக்காட்சியை வேண்டுமென்றே படத்தில் இடம்பெற வைத்திருக்கிறார்கள் எனவும், இதுவும் கூட விஜய்யையும் அவரது ரசிகர்களையும் சீண்டிப்பார்க்கும் ஒரு வேலை தான் என்றும் சொல்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.