Embilitiya youth death case - எம்பிலிப்பிட்டிய வழக்கு: ஊடகவியலாளர்களுக்கு தடைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,927 Views
எம்பிலிப்பிட்டிய காவல்துறையினருடன் இடம்பெற்ற மோதலின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு இன்று (14) மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. குறித்த வழக்கு நேற்று எம்பிலிப்பிட்டிய நீதிமன்ற நீதவான் தமந்த ராமநாயக்க வெலிகொடபிட்டியவின் மேற்பார்வையில் இந்த விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த அன்று (04) இரவு எம்பிலிப்பிட்டிய காவற்துறையின் தொலைப்பேசி செயற்பாட்டாளராக பணியாற்றிய அதிகாரி மற்றும் மோதல் இடம் பெற்ற இடத்திற்கு சென்ற நடமாடும் காவற்துறை குழுவின் அதிகாரிகள் இருவரிடமும் சாட்சிகள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே , இன்று இடம் பெற்ற சாட்சியங்கள் பெறும் சந்தர்ப்பத்தில் அதனை பதிவு செய்வதற்காக அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் போது அவர்களின் குறிப்பு புத்தகம் காவற்துறையால் பெறப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக ஒரு தாள் மாத்திரமே அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து , அங்கிருந்த ஊடகவியலாளர்கள் சம்பவம் தொடர்பாக காவற்துறை ஊடக பேச்சாளர் உதவி காவற்துறை அதிகாரி ருவண் குணசேகரவிற்கு அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் இவ்வாறான சம்பவம் மீண்டும் நடைப்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவற்துறை ஊடக பேச்சாளர் உதவி காவற்துறை அதிகாரி ருவண் குணசேகர தெரிவித்திருந்தார்.