3,244 Views
குறித்த பெண் பத்திரிக்கையில் மணமகன் தேவை என்ற விளம்பரத்தை வழங்கியுள்ளார்.
இதன்மூலம் அவரைத் தொடர்பு கொண்ட சந்தேகநபர் அவரிடம் பேசி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
தன்னை வங்கியொன்றின் முகாமையாளர் என்று கூறியுள்ள அவர் , அவசரமாக கடன் ஒன்றை செலுத்த பணம் தேவை எனக்கூறியுள்ளார்.
வெறும் தொலைபேசி அழைப்பின் ஊடாக தொடர்ந்த இவ்வுறவை நம்பிய பெண்ணும் , அவர் குறிப்பிட்ட வங்கி இலக்கத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.
எனினும் அவர் மீண்டும் தொடர்புகொள்ளாமை மற்றும் சந்திக்கவராமையால் சந்தேகம் அடைந்த பெண் , பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி விசாரணையில் இறங்கிய பொலிஸார் அந்நபர் வங்கி முகாமையாளர் அல்ல என்பதனையும் , அவர் நண்பனின் வங்கிக் கணக்கிலக்கத்தையே வழங்கியுள்ளமையையும் உறுதி செய்துள்ளனர்.
வங்கிக் கணக்கின் சொந்தக்காரரை கைதுசெய்துள்ள பொலிஸார் தொடர்ந்தும் பிரதான சந்தேகநபரை தேடிவருகின்றனர்.