40,445 Views
குறிப்பாக எம்பிலிப்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் பொலிஸாரும் சாதாரண மனிதர்களே, அவர்களுக்கும் இரக்ககுணம் , உணர்ச்சிகள் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவமொன்று தம்புள்ளையில் இடம்பெற்றுள்ளது.
ஆம், தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாரானாத் சமரக்கோன் இடம்மாற்றம் பெற்று செல்வதை அடுத்து பொலிஸ் நிலையமே கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியது.
குறித்த பொலிஸ் அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிலியந்தலை பொலிஸிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் அவர் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் இருக்கும் கடைசி தினமாகும்.
இதனையடுத்து அவருக்கு பிரியாவிடை வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிவில் சமூகத்தினர் , அப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது பலரும் அழுது தீர்த்தமையை காணக்கூடியதாக இருந்துள்ளது. தம்முடன் 18 மாதங்கள் கடமையாற்றிய உயரதிகாரி இடம்மாற்றம் செய்யப்பட்டு செல்வதை தாங்க முடியாமல் பல பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களும் அழுதுள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரி தம்புள்ளை நகரில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களுக்கு உதவி , போதைப் பொருள் ஒழிப்பு , பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு , குற்றங்களை ஒழித்தல் என பல நடவடிக்கைகளை குறித்த அதிகாரி முன்னெடுத்த தாக தெரிவிக்கப்படுகின்றது.