உதயநிதியின் 'கெத்து' வீண்போனதா ?
பணம் பத்தும் செய்துவிடும் இதற்கு நல்ல உதாரணம் கோடம்பாக்கம்
பணம் இருந்தால் யாரும் படம் எடுக்கலாம் யாரும் நடிக்கலாம் .இதுதான் விதி .ஆரம்பத்தில் தயாரிப்பாளராக இருந்த உதயநிதியை சினிமா ஆசை விட்டு வைக்கவில்லை .
தயாரிப்பாளர் தான் என்பதால் ஆரம்பத்தில் சந்தானத்தோடு சேர்ந்துகொண்ட இவர் ஒரு காமெடி கதையில் நடித்துவிட்டால் வென்று விடலாம் என்று கணக்குப்போட்டார் .அவருடைய கணக்கு வென்றது .
ஆரம்பத்தில் சந்தானத்தின் தயவால் வென்ற உதயநிதி .முதன் முறையாக தன்னுடைய கெட்டப் பெல்லாம் மாற்றி ஆக்சன் கதையையும் தெரிவு செய்து நடித்தார் கெத்து என்று பெயரும் வைத்து வெளி வந்த இந்தப்படத்தை இவர் பெரிதும் நம்பியிருந்தார் .
ஒரு பெரிய தொகை கொடுத்து எமிஜக்சனையும் ஜோடியாக நடிக்க வைத்தார் .பொங்கலுக்கு இந்தப்படம் வெளி வருவதற்க்கு முன்பே இவர் தன் நட்பு வட்டங்களுக்கு வெற்றிப் பார்ட்டி கொடுத்ததாகவும் தகவல் .
ஆனால் ஒரு சிறு எதிர்பார்போடு வெளிவந்த இந்தப் பொங்கலுக்கு வெளி வந்த இந்தப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்கிறது வசூல் கணக்கு .போதாக்குறைக்கு ஜல்லிக்கட்டுப் பிரச்னையில் சிக்கியிருக்கும் எமியும் இந்தப்படத்தில் இருப்பதால் அதுவும் இந்தப்படத்தின் கொஞ்ச வருமானத்தையும் பாதித்துவிடும் என்று பயந்து படப்போஸ்டர்களில் கூட இப்போது எமியை தூக்கிவிட்டார்களாம்.