அண்மைக்காலமாக தல அஜித்தின் மகன் ஆத்விக்கின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில்,பரவலாக பேசப்பட்டு வருகிறது. எல்லோரையும் கவரும் வகையில் ஆத்விக்கின் புகைப்படங்கள் அமைந்திருந்தன.
இந்த நிலையில் தல ரசிகர்கள்,ஆத்விக்கினை ''குட்டி தலை'' என செல்லமாக அழைத்து வருகின்றனர். குட்டி தலையை கொண்டாடி மகிழும் ரசிகர்கள் ஆத்விக்கின் புகைப்படங்களை அழகாக வடிவமைத்து தங்களின் கைகளில் பச்சை குத்தி வருகின்றனர்.ரசிகர்களின் இத்தகைய செயற்பாடுகள் தல மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறது.
பொதுவாக ரசிகர்கள் நட்சத்திரங்களின் உருவத்தை உடம்பில் பச்சை குத்திக்கொள்வது சாதாரணமானது. எனினும் நட்சத்திரங்களின் வாரிசினை உடம்பில் அடையாளமாக்குவது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.
ஆத்விக் பிறந்து 3 மாதங்கள் கடந்தும் அவரது புகைப்படங்களை தல அஜித் வெளியிடாமலேயே இருந்தார். இந்த நிலையில் அண்மையில் குடும்பத்தாருடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தல அஜித் வெளியிட்டதன் பிறகே இத்தகைய வரவேற்ப்பு கிடைத்திருக்கிறது ..