1995 ம் ஆண்டு 'தொட்டாச்சிணுங்கி' திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் தேவயானி.
அதன் பின்னர் 'காதல் கோட்டை' திரைப்படம் இவருக்கு நல்லதொரு பெயரை தமிழ் திரையுலகில் பெற்றுக்கொடுத்தது. அதன் பின் சூரியவம்சம், ப்ரண்ட்ஸ், தென்காசிப்பட்டணம், தெனாலி, வல்லரசு, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
பின்னர் வாய்ப்புக் குறையும் நேரங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து மேலும் பிரபலமாகியிருந்தார்.
இவர் 2001 ம் ஆண்டு இயக்குனர் ராஜகுமாரனைத் திருமணம் செய்துக்கொண்டார். இப்போது அவருக்கு 40 வயதாகிறது, 2 குழந்தைகளின் தாயான தேவயானி, நடிப்பதை சற்றே தள்ளிவைத்துவிட்டு, குடும்ப வாழ்வின் தன்னை முழுதும் ஈடுபடுத்தியிருந்தார். இப்போது இவர் திடீரென ஆசிரியராக கடைமையாற்ற ஆரம்பித்திருக்கிறார்.
இது பற்றி அவர் தெரிவிக்கையில், எனக்கு எப்போதும் எதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. எனவே தான் இந்த முடிவை எடுத்தேன், மேலும் எனக்கு ஆசிரியராக வேண்டும் என்ற ஆசையிருந்தது என்கிறார் தேவையானி.
தன்னுடைய இரு மகள்களும் கல்விப்பயிலும் பாடசாலையில் தேவயானி தற்போது ஆசிரிய கடமையில் ஈடுபட்டிருக்கிறார். இவரின் வகுப்பில் 45 குழந்தைகள் உள்ளனராம். நடிகை தேவயானி தான் எங்களின் வகுப்பாசிரியர் என்பதில் குழந்தைகளுக்கும் பெருமையாம்....
திரைப்படங்களில் இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களைப் போலவே, சாந்தமாகவும், அமைதியாகவும் குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறாராம் தேவயானி.