மலையாளத்திலிருந்து வந்து குதித்து கோடம்பாக்கத்தை கட்டிப் போட்டிருக்கும் பதுமைகளே அதிகம். இவர்கள் வரிசையில் சிந்தும் புன்னகை மூலம் அறிமுகமானவர் ''பீட்ஸா'' புகழ் ரம்யா நம்பீஷன்.
சில படங்களில் தலைகாட்டியிருந்தாலும் பீட்ஸாவுக்கு பிறகாவது நல்ல படங்களும் பெயரும் அமையும் என காத்திருந்தவருக்கு, வாய்ப்புக்கள் கதவைத் தட்டவில்லை.
பலர் எதிர்பார்த்தார்கள் ரம்யாவுக்கு நல்ல எதிர்காலம் வரவுள்ளது என்று! ஆனால், டமால் டுமீல் என ஒரு படத்திலே நடித்தார். அதுவும் பேசப்படவில்லை. பின்னர், இரண்டு பாடல்களைப் பாடினார். அதுவும் என்னவோ போலாகிவிட்டது.
உடனே தாய்மொழி மலையாளத்துக்கு தாவிவிட்டார்.
மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களில் அம்மணி தலைகாட்டுவதாக தகவல் வர விசாரித்தோம்.
அப்போதுதான் கசிந்தது உண்மை.
ஜெயசூர்யா ஜோடியாக நடிக்கும் ரம்யா நம்பீஷன், படத்தில் மாறுபட்ட பாத்திரத்தில் தோன்றுகிறாராம். அதாவது, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக அரிதாரம் பூசுகிறார். 10 வயது மகன், 6 வயது மகளாக இரு குழந்தைகளோடு படம் முழுக்க வந்து தன் பாத்திரத்தை உயிர்ப்பிக்க உள்ளார் ரம்யா.
#என்னம்மா? இப்போவே அம்மா ஆகிட்டீங்க?