இயக்குனர் சங்கரின் வீட்டிற்கு பலத்த பாதுக்காப்பு வழங்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன என்று, நம்ம கோடம்பாக்கத்து குருவி அலசியபோது, ஐ வெளியாகி வெற்றிகரமாக உலகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது.
அமோக வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். எதிர்பார்த்த அளவை கடந்து, இப்பொழுது பரவலாக பலராலும் பாராட்டப்படும் படமாக ஐ மாறியிருக்கிறது.
இந்நிலையில், ஐ படத்தின் இயக்குனர் சங்கர் வீட்டிற்கு எதற்க்காக இத்தனை பாதுகாப்பு என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.
நமக்கும் எழுந்ததே!
காரணம் இதுதான், ஐ திரைப்படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகளும் கதை வசனங்களும் இடம்பெறுவதாக குற்றம்சாட்டி திருநங்கைகள் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல்துறை அலுவலகம் முன்பாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ படத்தில், திருநங்கைகள் இகழ்ச்சிக்கு உரியவர்களாய் சித்தரிக்கப்படுகிறார்கள். ஷங்கர் இப்படி செய்வாரென நாம் எண்ணவில்லை என்கிறார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திருநங்கையும் நடிகையுமான ரோஸ்.
அத்தோடு, ஷங்கரின் வீட்டையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம் என அவர்கள் கொடுத்த அறிக்கையின் நிமித்தமாகவே ஷங்கரின் வீட்டுக்கு பலத்த பாதுக்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குருவி கொத்தி வந்துள்ள தகவல் சொல்கிறது.
#இதுக்கு நாம என்ன சொல்ல?