சுமார் 120 கோடி ஆண்டுகள் பழமையான நிலத்தடி நீரை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தென் ஆப்ரிக்காவின் Witwatersrand பகுதியில் உள்ள தங்கம் மற்றும் யுரேனியம் சுரங்கத்தில், சுமார் 120 கோடி ஆண்டுகள் பழமையான நிலத்தடி நீரை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 3 கி.மீ ஆழத்தில் கண்டறியப்பட்ட இந்த நீர், கோடிக்கணக்கான ஆண்டுகளாக வெளி உலகத் தொடர்பே இல்லாமல் தனிமைப்பட்டு இருந்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு வெறும் பூமி சார்ந்த ஆய்வு மட்டுமல்ல, இது விண்வெளி ஆராய்ச்சியிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய் கிரகம் அல்லது சனியின் நிலாவான டைட்டன் (Titan) போன்றவற்றின் மேற்பரப்புக்கு அடியில் இதே போன்ற சூழலில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.