2026 T20 உலகக் கிண்ண Super 8 சுற்றில் இந்திய-தென் ஆப்பிரிக்க போட்டிக்கு முன் இடம்பெற்ற பயிற்சியின் போது ஹர்திக் பாண்டியா அடித்த பந்து நேராக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் இடது முழங்காலில் பட்டது.சிராஜ் கடுமையான வலியால் உடனே மைதானத்தை விட்டு வெளியேறினார்.
சிராஜ் இதுவரை இந்தத் தொடரில் அமெரிக்காவிற்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி, மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.
ஏனைய போட்டிகளில் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் விளையாடி இருந்தனர்.
ஆனால், Super 8 சுற்றில் சிராஜ் மீண்டும் வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தக் காயம் அவரது பங்கேற்பை சந்தேகத்திற்குள் கொண்டுவந்துள்ளது.
அண்மையில் ஹர்ஷித் ராணா காயம் காரணமாக விலகிய நிலையில், சிராஜ் தாமதமாக அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் , சிராஜின் காயம் இந்திய அணிக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.