அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி பங்களாதேஷ் அணி தொடரைப் புறக்கணித்த நிலையில், அவர்களுக்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இந்நிலையில் T20 உலகக் கிண்ணத் தொடருக்கு சல்மான் அகா தலைமையில் 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடவுள்ளது.
சல்மான் அலி அகா (தலைவர் ), அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பகர் சமான், கவாஜா, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சதா பர்ஹான், சாஹிப்சதா, ஷாஹிம்ஹானி ,ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.