டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன் - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லோகா’.
இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒரு பெண்ணை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படத்தில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்ததுள்ளது ‘லோகா’ திரைப்படம்.
இந்த நிலையில், ‘லோகா’ திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் Script வேலைகள் நடந்து வருவதாகவும், இந்த வருடம் September மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இத்திரைப்படத்திலும் நான் நடிப்பேன் என்றும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் புதிய Update கொடுத்துள்ளார்.