ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியாகி, இந்தியத் திரையுலகையே வியப்பில் ஆழ்த்திய கன்னடத் திரைப்படம் 'காந்தாரா'. இந்த நிலையில், ரிஷப் ஷெட்டி நடிக்கும் அடுத்த பிரம்மாண்டத் திரைப்படம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகும் 'ஜெய் ஹனுமான்' திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார் என்பதுடன் பிரசாந்த் வர்மா ஏற்கனவே இயக்கி மாபெரும் வெற்றியடைந்த 'ஹனுமான்' திரைப்படத்தின் தொடர்ச்சியாகவே இத்திரைப்படம் அமைகிறது மேலும் முந்தைய பாகத்தில் தேஜா சஜ்ஜா நடித்திருந்த நிலையில், இதில் ஹனுமானாக ரிஷப் ஷெட்டி நடிக்கவுள்ளார்.
வெளியான இத்திரைப்படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.