செல்வராகவன் இயக்கத்தில் GV.பிரகாஷ்குமார் நடிக்கும் திரைப்படம் 'மெண்டல் மனதில்'.
தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி பிறகு ஒரு கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து தனக்கென்ன ஒரு இரசிகர் பட்டாளத்தை கொண்டவர் GV.பிரகாஷ்குமார். இவர் 2 தடவைகள் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
அதேபோல், 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குனராக அறிமுகமாகி, பல வெற்றித்திரைப்படங்களை இயக்கி பிறகு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் செல்வராகவன்.
இவர்கள் இவருடைய கூட்டணியில் வரவிருக்கும் 'மெண்டல் மனதில்' திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 'மெண்டல் மனதில்' திரைப்படத்தின் ''உயிரே உயிரே'' என்ற முதல் பாடல், இம்மாதம் 23ஆம் திகதி வெளியாகவுள்ளதாகத் திரைப்படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன், இத்திரைப்படத்தின் முதல் பாடலின் Promo வீடியோ வெளியாகியுள்ளது.