நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'நெடுஞ்சாலை' திரைப்படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து 'அசுரன்', 'விடுதலை-2' ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில் 'யூத்' என்ற திரைப்படத்தை தானே இயக்கி, நடித்துள்ளார்.
அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இத் திரைப்படம் March மாதம் 19ஆம் திகதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத் திரைப்படத்தின் முதல் பாடலான "முட்ட கலக்கி" பாடல் வெளியாகி மக்களிடையே நல்லவரவேற்பை பெற்றுள்ளது.
இத் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'பறந்தேனே' பாடல் நேற்று வெளியாகி உள்ளது. இதனை கென் கருணாஸ் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.