தமிழில் குறுகிய காலத்தில் கோலோச்சிய நடிகை என்றால் அது தமன்னாதான். ஆரம்பம் சொதப்பினாலும், பின்னர் வந்த படங்கள் மூலம் சுதாகரித்துக் கொண்டார். மளமளவென கையில் கிடைத்த படங்களில் நடித்தவர் செய்த பெரிய தவறு, கதைகளை ஆராயாமல் நடித்தமை தான். பல படங்களில் நடித்தாலும், அந்தப் படங்களில் சில ஊத்திக் கொண்டன. இருந்த மார்கெட்டையும் இல்லாமல் செய்தது.
இறுதியாக அஜித்தின் வீரம் திரைப்படத்தில் நடித்தார். அதுவும் அவ்வளவாக தமன்னாவுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. . அவரது ரீ எண்ட்ரி அவ்வளவு நன்றாக அமையவில்லை. இதனால் சோகத்தில் உட்கார்ந்திருந்தவருக்கு, நண்பேண்டா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
முன்னணி நடிகையாக இருந்தவர், குத்துப் பாடலுக்கா என்று என்று நேநேகள் அனைவரும் யோசிப்பது புரிகிறது. என்ன செய்ய? இருக்கும் வாய்ப்பை தானே பயன்படுத்தலாம். முதலில் நயன்தாராவையே பாடலுக்கும் ஆட வைக்க கேட்டிருக்கிறார்கள். அம்மணி மறுக்கவே தமன்னாவுக்கு வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-