லொள்ளு நடிகர் விமல் மற்றும் சமுத்திரகனி இணைந்து நடித்து வரும் படம் நீயெல்லாம் நல்லா வருடா. நீண்ட நாட்களாக தயாராகி வந்த இப்படம், தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது இப்படத்தின் தலைப்பை காவல் என்று மாற்றியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ படத்தின் முதல் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் முன்னோட்டத்தை பார்த்த பல திரைப்பட முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பாளர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
ஆனாலும், பலர் இந்தப் படத்தின் தலைப்பு அவளவு ன்றாக இல்லை எனவும், முடிந்தால் மாற்றி வையுங்கள் என வேண்டிக்கொண்டதன் பிரகாரம் படத்தலைப்பு மாறியுள்ளது. காவல் என்பது கொஞ்சம் நல்லாவே இருக்கிறது போல ஒரு பீலிங்கு !!
-கோடம்பாக்கக் குருவி-