புலி 120 கோடியா?????
vijay-film-puli-budget - புலி 120 கோடியா?????Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
புலி 120 கோடியா?????
பொதுவாக பெரிய நடிகர்களின் படம் வெளிவருகிறது படம் வந்து ஒரு சில நாட்களில் படம் 100 கோடி வசூல் ,200 கோடி வசூல் என தொடர்ந்து கட்டுக்கதைகள் அவர்களது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரப்பப்படுகின்றது.
இந்த செய்திகள் எந்தளவு உண்மை, பொய் என்பது பொதுவான சினிமா ரசிகர்களுக்கு சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது ..
படம் மாபெரும் வெற்றி பலகோடி வசூல் என்ற இந்த கதைகளை சில ஊடகங்களும் சொல்கிறது.சரி உண்மை நிலை என்ன என்று தயாரிப்பாளர்கள் பக்கம் கொஞ்சம் தலை விட்டு விபரம் அறிந்தவர்களிடம் பேச்சு கொடுத்தால் அங்கு நிலைமை தலைகீழானது.
பெரும் வசூல், மாபெரும் வெற்றி என்று சொல்லப்பட்ட பல படங்கள் தயாரிப்பாளர்கள் கையை கடித்திருக்கிறது .சில படங்கள் முதலுக்கும் மோசமில்லாமல் தலையை காப்பாற்றி இருக்கிறது ....
இதே போல்தான் இப்போது தாயரிப்பு செலவையும் பல 100 கோடிகள் என்று கதைவிடும் கலாசாரம் கோடம்பாக்கத்தில் அதிகரித்திருக்கிறது .
அப்பிடியொரு செய்திதான் புலியின் Budget 120 கோடி என்பது.
நாங்கள் சொல்லவில்லை விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்!
*கந்தப்பன் பிரசாந்த்.