Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
22
முட்டி மோதும் சகோதரிகள் - முன்னேறத் தவிக்கும் வாரிசுகள்.

Ambiga vs radha - முட்டி மோதும் சகோதரிகள் - முன்னேறத் தவிக்கும் வாரிசுகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,454 Views
முட்டி மோதும் சகோதரிகள் - முன்னேறத் தவிக்கும் வாரிசுகள்.

தென்னிந்திய தமிழ்த் திரையுலகில், 90களில்  இரட்டைச் சிட்டுக்களாக சிறகடித்த சகோதரிகள்தான் அம்பிகா மற்றும் ராதா ஆகியோர். தமிழ் சினிமாவின் நடிகைகள் தரப்பில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி கலக்கியவர்கள் இவர்கள். திருமணத்துக்கு பிறகு ராதா நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தாலும் அம்பிகா அவ்வப்போது அக்கா, அம்மா வேடத்தில் தலை காட்டிக்கொண்டிருக்கிறார் இன்றுவரை.


இந்தநிலையில், தன்னைத் தொடர்ந்து தன் வாரிசுகளை திரையில் ஜொலிக்க வைக்க "கோ" படம் மூலம் தனது மூத்த மகள் கார்த்திகாவை ஹீரோயினாக களம் இறக்கினார் ராதா. படம் ஹிட் அடித்ததன் மூலம் தன் முயற்சியில் ராதா வெற்றியும் கண்டார் என்றே சொல்லலாம்.  அடுத்து பாரதிராஜா இயக்கிய ‘கொடி வீரன்’ படத்தில் நடித்தார் கார்த்திகா. அந்தப்படத்தைப் போன்றே, பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கார்த்திகாவின் வளர்ச்சியும் மந்தகதியிலேயே அமைந்துவிட்டது. அடுத்து கார்த்திகா நடித்துக்கொண்டிருக்கும் "வா டீல்", "பொறம்போக்கு" ஆகிய படங்கள் வெளியாகி வெற்றிநடை போட்டால் மட்டுமே திரைத்துறையில் ஜொலிக்க முடியும் என்ற நிலையில் உள்ளார் என்றே சொல்லலாம்.

தன்னையும் தன் சகோதரி அம்பிகாவையும் போல, தன் இரண்டு மகள்களும் திரைவானில் மின்னவேண்டும் என்ற ஆசையில் மூத்த மகளை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய அதே வேகத்தில் பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் "கடல்" படம் மூலம் இளைய மகள் துளசியையும் ஹீரோயின் ஆக்கினார் ராதா. அவருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் அமையாததால் கார்த்திகாவைப் போலவே ஹிட்டுக்காக காத்திருக்கிறார் துளசி.

அவர்களின் கதை அப்படியிருக்க, ராதாவின் அக்கா அம்பிகாவோ தான் மட்டும் தங்கைக்கு குறைந்தவளா என்பது போல, தனது 2 மகன்களான ராம்கேசவ், ரிஷிகேஷ் ஆகியோரை ஹீரோக்களாக உருவாக்கி மின்னும் நட்சத்திரப்பட்டியலில் சேர்த்து விடுவதென்ற முடிவுடன் கங்கணம் கட்டிக் களத்தில் குதித்திருக்கிறார். இந்தநிலையில், அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த மகன்களை வரவழைத்து தமிழ்நாட்டின் கோடம்பாக்கத்தில் கால் பதிக்க வைத்திருக்கும் அம்பிகா, முதல் மகனான ராம்கேசவ் நாயகனாக நடிக்க வாய்ப்பும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அத்தோடு, இரண்டாவது மகன் ரிஷிகேஷை நாயகனாக்கும் தயார்ப்படுத்தலிலும் இறங்கியிருக்கிறாராம் நடிகை அம்பிகா.

திரையுலக வாரிசுப்போட்டி.............
தமிழக அரசியலுக்கும் அடித்தளம் இங்கே தானோ.....???

*கணேசமூர்த்தி ராகவன்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top