உலகம் முழுவதும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனம் முழுவதும் இப்போது கால்பந்தாட்ட போட்டிகளில் இருக்கும் இக்காலகட்டத்தில் எங்களுக்கும் விளையாட தெரியும் என ஒருவர் விளையாட ஆரம்பித்துள்ளார்.
இவர் வேற யாரும் இல்லை இங்கிலாந்து குட்டி இளவரசன் ஜோர்ஜ் தான்.

இவர் கால்பந்து விளையாடிய அழகு எல்லோரையும் ரசிக்க வைத்தது.
இங்கிலாந்தில் பார்க் போலோ என்ற சங்கத்தின் ஏற்பாட்டில் போலோ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. தொண்டு நிறுவனமொன்றிற்கு நிதி திரட்ட வேண்டி அரச குடும்பத்தை சேரந்த இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் ஹரி எதிர் எதிர் அணிகளுக்கு தலைமைத்தாங்கியுள்ளனர். இதனை பார்வையிடுவதற்காக தன் தாயுடன் வந்த குட்டி இளவரசன் ஜோர்ஜ் திடீரென மைதானத்திற்குள் இறங்கி....போலோ பந்தினை தனது குட்டி கால்களினால் உதைத்து விட்டு பரவசமாக சிரித்து விளையாடியுள்ளார்.

இது அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. போலோ விளையாட்டிற்கு பயன்படுத்தும் கம்பையும் கையிலெடுத்து விளையாடியுள்ளார்.

குட்டி இளவரசரரின் விளையாட்டு பார்வையாளர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
வளர்ந்த பிறகு இந்த இளவரசர் இங்கிலாந்து அணிக்காக கால்பந்து விளையாடுவாரோ என்னமோ?