கபிலவஸ்துபுர நிசெக்க ஸ்ரீ சர்வஞ்ஞ தாதுவை இலங்கை மக்கள் வழிபடுவதற்கான வாய்ப்பை வழங்கும் வழங்கும் வகையில் 'ஹிரு உத்தம தாது வந்தனா' ஊர்வலம் இன்று அதிகாலை கதிர்காமம் கிரிவெஹெர விகாரையிலிருந்து ஆரம்பித்துள்ளது.
இதன்பொருட்டு பாரியளவிலான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
வஸ்கடுவ - ராஜகுரு ஸ்ரீ சுபூதி விகாரையில் வைக்கப்பட்டிருந்த கபிலவஸ்துபுர ஸ்ரீ சர்வஞ்ஞ தாது இன்று அதிகாலை கதிர்காமம் கிரிவெஹெர விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
கிரிவெஹெர விகாரையின் தாது மண்டபத்தில் வைக்கப்படவுள்ள சர்வஞ்ஞ தாதுவை எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு பொதுமக்கள் வழிபட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாளை மறுதினம் சர்வஞ்ஞ தாது பல்லேபெத்த - ஸ்ரீ சங்கபால விகாரைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.