மஹிந்தவும் , மைத்திரியும் என்ன பேசினார்கள்?
Mahinda and Maithiri meeting - மஹிந்தவும் , மைத்திரியும் என்ன பேசினார்கள்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் சந்திப்பு இடம்பெற்றது
இந்தநிலையில் தமக்கிடையிலான சந்திப்பை தொடருவதென்று இருவரும் இணங்கியுள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டன.
குறிப்பாக கட்சியின் எதிர்காலம் குறித்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
எனவே இந்த சந்திப்பு 100 வீத வெற்றிப்பெற்றுள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்று இடம் பெற்ற சந்திப்பு, திருப்தியான இணக்கப்பாடுகள் எட்டப்படாது நிறைவு பெற்றததாக முன்னாள் அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையேயான சந்திப்பில் ஐந்து முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலின் பிரதமர் வேட்பாளர், உள்ளுராட்சி மன்றம் கலைக்கப்படுதல், பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுதல், வேட்பாளருக்கான வேட்பு மனு கையளித்தல், காவற்துறை நிதி மோசடி பிரிவு அரசியல் மயப்படுத்தப்படுகின்றமை தொடர்பிலே அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.