இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
சென்னை அணிக்காக பத்து கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்த அஸ்வின் எதிர்பார்த்த அளவுக்கு திறமையை வெளிக்காட்டாத நிலையில் திடீரென ஓய்வை அறிவித்தார்.
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஏனைய Franchise 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் அஸ்வின் கூறினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றது ஏன் என்பது குறித்து அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
சொந்த ஊரான சென்னையில் தொடங்கிய பயணத்தை அங்கேயே முடிப்போம் என நினைத்தேன். ஆனால் கடந்த சீசன் எனக்கு ஏமாற்றம், வலி மிகுந்ததாக இருந்தது. என்னை விடுவிப்பதா? தக்க வைப்பதா? என்ற தலைவலியை நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டாம் என நினைத்து, நானே ஓய்வை அறிவித்தேன், நான் விலகியதால் சென்னை அணிக்கு கிடைக்கும் ரூ.10 கோடியை வைத்து மினி ஏலத்தில் நல்ல வீரர்களை எடுப்பார்கள் என நம்பினேன். என்று அஸ்வின் தனது மனம் திறந்துள்ளார்